திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்து விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

பேரூராட்சிகளில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட்டம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, செயல் அலுவலர் சதிஷ் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது.

இதில், கிராமியக் கலைக் குழுவினர் பங்கேற்று போகிப் பண்டிகையின்போது வெளிப்படும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஆடல், பாடல்களுடன் அரங்கேற்றினர். மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை செயல் அலுவலர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் வழங்கினர்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், ‘புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவோம்’ என செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் மற்றும்துண்டு பிரசுரங்கள் வழங்கியவாறும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கியவீதிகளின் வழியாக பேரணியாகசென்று பேருந்து நிலையத்தில்நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் தர் மற்றும் பேரூராட்சி பணியாளர் கலந்துகொண்டனர்.

மாமல்லபுரத்தில் ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்து,கலைக் குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இதில், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிக்குமார், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

40 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

38 mins ago

சினிமா

56 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்