அரசு சார் நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதிய நிலுவை புதுவையில் தொழிற்சங்கத்தினர் மறியல் 40-க்கும் மேற்பட்டோர் கைது

By செய்திப்பிரிவு

அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும், தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய நிலுவைஊதியத்தை வழங்க வலியுறுத் தியும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பாப்ஸ்கோ, கான் பெட், பாண்டெக்ஸ், பாண்பேப் தொழிலாளர்கள் புதுவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 36 மாதஊதியம், கான்பெட் தொழிலாளர்க ளுக்கு 14 மாத ஊதியம், பாண் டெக்ஸ் தொழிலாளர்களுக்கு 48 மாத ஊதியம், பாண்பேப் தொழிலாளர்களுக்கு 47 மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலு வையில் இருந்து வருகிறது. இந்த ஊதியத்தை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஊதியம் வழங்குவதற்கு அனுமதி கொடுக்காமல் கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கந்தசாமி, தான் பொறுப்பு வகிக் கும் இலாகாவைச் சேர்ந்த 15 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி இரவு முதல் சட்டப்பேரவை வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், அமைச்சரின் கோரிக்கையை ஆளுநர் நிறைவேற்ற வலியு றுத்தியும் ஏஐடியுசி, பாப்ஸ்கோ, கான்பெட், பாண்டெக்ஸ், பாண் பேப் சங்கங்களின் சார்பில் நேற்று ராஜீவ்காந்தி சிக்னல் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் ராஜீவ்காந்தி சிலை அருகில் வந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷே கம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, பாப்ஸ்கோ சங்கத் தலைவர் ராஜீ, கான்பெட் சங்கத் தலைவர் கார்த்திபன், பான்டெக்ஸ் சங்கத் தலைவர் முருகன், பான்பேப் சங்கத் தலைவர் அண்ணா மலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோரிமேடு போலீஸார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்