புதுவையில் எம்பிபிஎஸ் சேர்க்கைஇன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக்கல் லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான எம்பிபிஎஸ் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கும், 10 மணிக்கு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில்இட ஒதுக்கீடு பெறும் மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 10.30 மணிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நிர்வாக இடங்களுக்கான கலந் தாய்வு நடக்கிறது.

புதுவையில் பாரதிதாசன் மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக், காரைக் கால், மாகே, ஏனாமில் காணொலிகாட்சிக்கு அரங்கம் உருவாக் கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாத மாணவர்கள் இந்த மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். காணொலி காட்சியில் திடீர் இடையூறு ஏற்பட்டால் 95666 88077, 87781 57517 என்ற எண்களை மாணவர்கள் தொடர்பு கொண்டு இடங்களை பெறலாம் என சென்டாக் நிர்வா கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்