தமிழக நியாய விலை கடைகளில் பனைப் பொருள் விற்க பரிசீலனை முதல்வர் அறிவிப்புக்கு குமரி அனந்தன் வரவேற்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு காந்தி பேரவைத் தலைவரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கை:

நியாய விலை கடைகளில் பனைப் பொருட்கள் வழங்குவது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பதநீர் அருந்தினால்விக்கல், நெஞ்சுக்கரிப்பு நீங்கும். பனங்கருப்பட்டி சாப்பிட்டால் ரத்தவிருத்தி அதிகரிக்கும். கைவிசிறி, கைப்பை உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் என நீண்டகாலமாக காந்தி பேரவை வலியுறுத்தி வருகிறது. அதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என முதல்வர் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாகும்.

உமி மட்டும் நீக்கப்பட்ட தவிட்டோடு இருக்கும் அரிசியே சத்துள்ளது. தவிட்டரிசியில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு, இருப்புச் சத்துகள் உள்ளன. எனவே, ரேஷன் கடைகளிலும், கல்விக் கூடங்களிலும் தவிட்டரிசியே கொடுக்க வேண்டும் என்றுஅரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்