தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தீ விபத்தில் கடைகள் சேத மடைந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என, ஆஸ்டின் எம்எல்ஏ தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “ கரோனா பரவலால் சுமார் 8 மாதங்களாக கன்னியாகுமரியில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிக அளவில் முதலீடு செய்து, வியாபாரிகள் கடைகளைத் திறந்தனர். இந்நிலையில் தீ விபத்தால் அவர்கள் மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கடையிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கன்னியாகுமரி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். நல்ல முடிவை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்