அறநிலைய துறைக்கு எதிராக கிராம மக்கள் மனு

By செய்திப்பிரிவு

வேலூர்: காட்பாடி அருகேயுள்ள முருகன் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கையகப்படுத்துவதை தடுக்கக் கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

காட்பாடி அடுத்த 55 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ள முருகன் கோயிலை கிராம மக்கள் முறையாக பராமரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்து முருகன் கோயிலை கையகப்படுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு முயற்சி எடுத்தனர். நாங்கள் முறையாக பராமரித்து வரும் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 secs ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்