பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் படிப்படியாக குறைப்பு

By செய்திப்பிரிவு

நீர்வரத்துக் குறைவால் பூண்டி ஏரியிலிருந்து, உபரிநீர் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணாபுரம் அணை உபரிநீர், மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் என, விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், ஏரியின் நீர் இருப்பு 2,814 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 34 அடியாகவும் இருந்தது. ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 300 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்