ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரி போல் கட்டணம் வசூலிப்பு இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரி போல் கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத் தின் மாநில தலைவர் கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

பல்கலைக்கழக மானியக்குழு தமிழக கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 45 சதவீதம்அண்ணாமலை பல்கலைக்கழ கத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இதற் கான செலவுகள் குறித்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்று வரைதணிக்கை செய்யாமல் உள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பாரா மெடிக்கல் ஆகியவைகளில் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணம் போல் இங்கேயும்வசூலிக்கிறார்கள். இது கண்டிக் கத்தக்கது. அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை வசூ லிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) நுழைவுத்தேர்வுக்கு எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அரசு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தனி கட் டணத்தை அறிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மாண வர்களின் முதுநிலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணும் நுழைவுத் தேர்வில் 25 சதவீதமும் நேர்முகத் தேர்வில் 25 சதவீதமும் எடுத்துக்கொள்வார்கள். தற்போது நுழைவுத் தேர்வில் 70 சதவீதமும், நேர்முகத் தேர்வின் 30 சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் முதுநிலை கல்வி மதிப்பெண்ணை கணக்கில் எடுத் துக்கொள்ளவில்லை. இதனால் மாணவர்களை ஆராய்ச்சிப் படிப்பில் படிக்க விடாமல் விரட்டும் நடவடிக்கையாக உள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்ட போது ஊழல் நடைபெற்றதாக அப்போது இருந்து துணைவேந்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதற்கான எந்த விசா ரணையும் நடைபெறவில்லை. இதில் சம்பந்தபட்ட பலபேர் ஊழல்குற்றச்சாட்டில் தொடர்பில் உள் ளார்கள். இது அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக உள் ளது. பல்கலைக்கழக நிர்வாகம் ஊழல்வாதிகளுக்கு துணை போனால் இந்திய மாணவர் சங்கம்நவம்பர் மாதத்தில் மாணவர்களைதிரட்டி பெரிய அளவில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை நடத் தும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்