எஸ்.புதூரில் ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், எஸ். புதுார் ஒன்றிய அலுவலகத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகத்தைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து அலுவலகத்தைச் சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணி நடந்து வந்தது.

நேற்று அலுவலகத்தையொட்டி புதருக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்