உலக மீனவர்கள் தினத்தையொட்டி கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு மலரஞ்சலி

By செய்திப்பிரிவு

உலக மீனவர்கள் தினத்தை யொட்டி, கடலில் உயிரிழந்த மீனவர் களுக்கு பாம்பன் கடற்கரையில் நேற்று மீனவர்கள் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் புதுடெல்லியில் கூடி விவாதித்து, உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராட, மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ம் தேதியை உலக மீனவர் தினமாக கடைப்பிடிக்கின்றனர். அதன்படி, பாம்பன் வடக்குக் கடற்கரையில் நேற்று மீனவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார். கடலில் மீன் பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாம்பனில் உள்ள பெரியநாயகி மகாலில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மீனவர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர்கள், நெய்தல் ஆண்டோ, பீட்டர் பாண்டியன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் சிலம்பாட்டமும் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்