மோட்டார் வாகன ஆய்வாளரின் காரில் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: மார்த்தாண்டம் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சப்பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்புகார்கள் வந்தன. கடந்த சில நாட்களாக அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மார்த்தாண்டம் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை நாகர்கோவில் ஒழுகினசேரியில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். பணத்துக்கான ஆவணங்கள் பெருமாளிடம் இல்லை. அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து, பெருமாளிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் மீது கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகளுக்கு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்