வியாபாரியை கண்டித்து விவசாயிகள் மறியல்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: அம்மூர் நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரியை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, விவசாயிகளிடம் இருந்து தினசரி 1,000 முதல் 1,500 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு, உள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள் பதிவு செய்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துவருகின்றனர். மேலும், வெளியூர் வியாபாரிகள் யாரையும் நெல் கொள்முதல் செய்யவிடாமல் உள்ளூர் வியாபாரிகள் தடுப்பதுடன் விவசாயிகளையும் தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாபாரி சரவணன் என்பவர் விவசாயிகளை நேற்று தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற ராணிப்பேட்டை காவல் துறையினர் விவசாயிகளை சமாதானம் செய்ததுடன் பிரச்சினைக்குரிய வியாபாரியையும் அழைத்து எச்சரித்தனர்.

இதனால், ராணிப்பேட்டை-அம்மூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்