அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பேசும்போது, ‘‘கெலமங்கலம் ஒன்றிய கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

ஒன்றியக் குழு தலைவர் கேசவமூர்த்தி பேசும்போது, ‘‘கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவதைத்தவிர்க்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பெற்றோர்களை அணுகி அவர்களுடைய பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அறிவுறுத்த வேண்டும்,’’ என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து கெலமங்கலம் ஒன்றி யத்தில் உள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பணியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்