கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக்கோரி மறியல் போராட்டம் :

By செய்திப்பிரிவு

கட்டுமானப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் சட்டங்களையும், நலவாரியங்களையும் சீரழிக்கக் கூடாது. ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் இதர பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் நாட்டாண்மைக் கழக கட்டிடம் அருகே நடந்த போராட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க செயல் தலைவர் சிங்காரவேலு தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 81 பெண்கள் உள்பட 156 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை போலீஸார் விடுவித்தனர்.

தொழிலாளர்கள் மறியல்

கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நாமக்கல் மற்றும் பள்ளிபாளையத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கு.சிவராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் ப.ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் பி.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.மோகன், எஸ்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்