மாநகரில் சாலை விபத்துகளை தடுக்க புதிய திட்டம் அமல் :

By டி.ஜி.ரகுபதி

கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை,திருச்சி சாலை ஆகியவற்றில் நடைபெறும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளால் அச்சாலைகள் மட்டுமின்றி, அருகேயுள்ள இணைப்புச் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்களால் ஏற்படும் சாலை விபத்துகளாலும் உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, சமூக செயல்பாட்டா ளர் பீளமேட்டைச் சேர்ந்த செந்தில்குமார் கூறும்போது, ‘‘மாநகரில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. விபத்துகளை தடுக்க அபராதம் விதிப்பது மட்டுமே தீர்வாகாது. உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வாகன ஓட்டுநர் மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்துகள், நெரிசலை குறைக்க ‘இஇஇ’ எனப்படும் ‘என்போர்ஸ்மென்ட், இன்ஜினியரிங், எஜூகேஷன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘என்போர்ஸ்மென்ட்’ என்பது சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், ‘இன்ஜினியரிங்’ என்பது நெரிசல், விபத்துகளுக்கு சாலைகள் காரணம் என்றால் அதை சரி செய்ய மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை யிடம் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து சீரமைக்க நடவடிக்கை எடுத்தல், ‘எஜூகேஷன்’ என்பது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பொருளாகும்.

முதல்கட்டமாக, மாநகரில் விதிமீறல்கள் அதிகளவில் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு ‘ஜீரோ வைலேஷன் ஜோன்’ (விதிமீறல்கள் இல்லாத பகுதிகள்) என்ற இலக்கை மையமாக வைத்துதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவிநாசி சாலை நவஇந்தியா சந்திப்பு,மேட்டுப்பாளையம் சிந்தாமணி புதூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இத்தணிக்கை தீவிரமாக நடத்தப்பட்டுள் ளது. சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டு நர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சில சாலைகளில் காணப்படும் குழிகள், மாநகராட்சியுடன் இணைந்து சரி செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

32 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்