ஆழியாறு அணையில் 90 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் சுமார் 90 ஆயிரம் கட்லா மற்றும் மிருகால் ரக மீன் குஞ்சுகள் ஆழியாறு அணையில் விடப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கட்லா, ரோகு, மிருகால் போன்ற இந்திய பெரு வகை கெண்டை மீன் இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 60 கிலோ முதல் 100 கிலோ வரை பிடிக்கப்படும் மீன்கள் உணவுக்காக பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் மீன் குஞ்சுகள் ஆழியாறு அணையில் விடப்படுகின்றன. இந்நிலையில், நேற்று 90 ஆயிரம் கட்லா மற்றும் மிருகால் இன மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தினர் கூறும்போது, “பவானிசாகர், மேட்டூர், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் உள்ள தாய் மீன் பண்ணைகளில் இருந்து வாங்கி வரப்படும் கட்லா, ரோகு மற்றும் மிருகால் ரக நுண் மீன் குஞ்சுகள் ஆழியாறில் உள்ள மீன் விதைப் பண்ணையில் விட்டு வளர்க்கப்படுகிறது. 90 நாட்களில் 10 செமீ முதல் 13 செமீ வரை வளர்ந்த மீன் குஞ்சுகள் ஆழியாறு அணையில் விடப்படுகின்றன. இந்த வகை மீன்கள் ஓராண்டில் ஒரு கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. அணையில் 3 லட்சம் மீன்கள் குஞ்சுகள் விட திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்