பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் : தக்காளி கிலோ ரூ.75-க்கு விற்பனை :

By செய்திப்பிரிவு

கோவை: கனமழை காரணமாக வரத்து குறைந்ததால், தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.150 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய, டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ உடுமலைப் பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டன. இவை, கோவையில் உள்ள சிந்தாமணி தலைமை அலுலவகம், கோவை மாவட்ட நூலக ஆணைக் குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர் சாலை கிளை அலுவலகம், தெலுங்குபாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக சாலை வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.75-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இங்கு பொதுமக்களுக்கு மட்டுமே விற்கப்படும். வியாபாரிகளுக்கு விற்கப்படாது. அதிகபட்சம் ஒருவருக்கு 3 கிலோ வரை தக்காளி வழங்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்