பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு : ஈடிசியா செயற்குழுவில் தீர்மானம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈடிசியா செயற்குழு கூட்டம், சங்கத்தலைவர் பி.திருமூர்த்தி தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் புதிய பிளாஸ்டிக் பொருட்களாக உருவாக்குவதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எனவே, மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜவுளி தொடர்புடைய பொருட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஈரோடு நகரப் பகுதியில் மழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர்கள் வி.டி.  தர், பி.கந்தசாமி, பொருளாளர் எஸ்.பழனிவேல், இணைச் செயலாளர் எ.சரவணபாபு, பி.அருள் செல்வம், முன்னாள் தலைவர்கள் ஆர். சுப்பிமணியன், கே. வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்