தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் : அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதுரை யில் நடந்த அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்குக்கு மாநில அமைப்புச் செயலாளர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். வீட்டு வேலைத் தொழிலாளர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, மதிமுக மாவட்டப் பொரு ளாளர் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர். கோரிக்கை களை விளக்கி கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் கீதா பேசி னார்.

தீர்மானங்கள்

மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொழி லாளர்களுக்கு விரோதமாக புதிதாகக் கொண்டுவரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும், தொழிலாளர்- தொழிற்சங் கங்களின் உரிமைகளைப் பறித்து நலவாரியங்களைக் கலைக்கும் மத்திய அரசின் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப்பெற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நலவாரியங்களைச் சீரமைக்க வேண்டும், அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கும் ஜிஎஸ்டி யில் ஒரு சதவீதம் ஒதுக்க வேண்டும். நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல் வரின் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்

ஹெச்எம்.எஸ். மாநிலச் செயலாளர் திருப்பதி, தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன், எஸ்.ஆர்.எம்.யூ ரபீக் உட்பட பல்வேறு அமைப்புகள், சங்கங் களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்