நாமக்கல் மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24-ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24-ம் தேதி) நாமக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியப்பட்டி, கீழ்சாத்தம்பூர், ராமநாய்க்கன்பட்டி, லக்காபுரம் ஆகிய கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுபோல் சேந்தமங்கலம் தாலுகாவில் பொட்டிரெட்டிப்பட்டி, நடுக்கோம்பை, எருமப்பட்டி கிராமத்திலும், ராசிபுரம் தாலுகாவில் வடுகம், ஆர்.புதுப்பட்டி, கல்லாங்குளம், ஆயில்பட்டி கிராமங்களிலும், மோகனூர் தாலுகாவில் மோகனூர், வடவத்தூர், எஸ்.வாழவந்தி ஆகிய கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது.

இதுபோல் திருச்செங்கோடு தாலுகா எஸ்.இறையமங்கலம், முசிறி, பிள்ளாநத்தம், கொன்னையார், அவிநாசிப்பட்டி ஆகிய கிராமங்களிலும், பரமத்தி வேலூர் தாலுகாவில் மாணிக்கநத்தம், மணியனூர், பிலிக்கல்பாளையம், நல்லாக்கவுண்டம்பாளையம் கிராமங்களிலும், குமாரபாளையம் தாலுகாவில் கலியனூர், அக்ரஹாரம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களிலும் பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்