ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது செட்டிபாளையம் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அகல ரயில் பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சிறிய மழை பெய்தாலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல தேங்கி விடுகிறது. இதை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களில் நீர் புகுந்து பழுதுபட்டு நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுமார் 3 அடி உயரத்துக்கும் 40 அடி நீளத்துக்கும் சேறும் சகதியுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நம்பியமுத்தூர், தேவநல்லூர், தென்குமாரபாளையம், சிஞ்சுவாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோலார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், உடுமலை, பொள்ளாச்சி நகரப்பகுதிகளுக்கும் வரமுடியாமல் தவிக்கின்றனர். கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் சுரங்கத்தின் கீழ் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்