வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள சுத்தமல்லி நீர்த்தேக்கம், தொடர்மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நேற்று நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,300 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இதன்காரணமாக காரைக்குறிச்சி, அருள்மொழி, அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களின் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசிப்போர், பாதுகாப்பாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து,பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஜெயராஜ், வேளாண் அலுவலர் செல்வகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ், காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்