கரோனா பாதிப்பிலிருந்து விடுபட : ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மகா சமுத்திர ஆரத்தி

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பிலிருந்து விடுபட ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மகா சமுத்திர ஆரத்தி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா பாதிப்பிலிருந்து உலகம் விடுபடவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், ராமேஸ்வரம் திருக்கோயில் அக்னி தீர்த்தம் மாசுபடாமல், அதன் புனிதம் காக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தம் மகா சமுத்திர ஆரத்தி சமிதி சார்பில் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.

அக்னி தீர்த்த கடற்கரையில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க 27 நட்சத்திர தீபங்களுக்கு ஜோதி ஏற்றி, சமுத்திர பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. மகா சமுத்திர ஆர்த்தி சமிதியின் செயலாளர் தில்லை பாக்கியம், நிர்வாகிகள் மோகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகா சமுத்திர ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 mins ago

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்