நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்/ அரியலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பாலுக்கான 3 மாத நிலுவைத் தொகையை கூட்டுறவு சங்கங்கள் உடனே வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில பொதுச் செயலாளர் கே.முகமது அலி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், திராவிடர் கழக நகரச் செயலாளர் தங்கராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சரிடம் மனு: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், பெரியநாகலூர் பிரிவுப் பாதை அருகில், பெரியநாகலூர், சின்னநாகலூர், காட்டுப்பிரிங்கியம் கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர். அதில், பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் சில மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு முறையாக பணம் தராததால், பால் முகவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்