போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை : நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

போக்சோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (29) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியதாக அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் மணிகண்டன், அவரது தந்தை பொன்னுசாமி, தாயார் லட்சுமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மணிகண்டனின் பெற்றோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்