நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆட்சியர், எஸ்.பி.யுடன் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெறுகிறது. இதன்படி மாவட்ட ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு உறுப்பினர், 5 ஊராட்சித் தலைவர்கள், 18 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 25 பதவிகளுக்கு அக்.9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளராக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத் தலைவர் சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் நாமக்கல் சுற்றுலா மாளிகையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறினார். மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்