பேராசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் கைது : 15 பவுன் நகைகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

வாணியம்பாடியில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி பேராசிரியர் அப்துல்வஹாப். இவர், கடந்த 16-ம் தேதி வெளியூர் சென்றார். 18-ம் தேதி வீடு திரும்பியபோது அவரது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணம், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அப்துல்வஹாப் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி(25), காமராஜபுரத்தைச் சேர்ந்த முருகன் (24), நேதாஜி நகரைச் சேர்ந்த வசந்தகுமார் (25) ஆகிய 3 பேர் தான் கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்றது என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வாணி யம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்பிரிவு காவல் துறையினர் சென்னாம் பேட்டையில் பதுங்கியிருந்த முருகன், வசந்தகுமார் மற்றும் அஸ்கர்அலி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், 2 மடிக்கணினிகள், 3 இரு சக்கர வாகனங்கள், 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்