தேசிய திறனறித் தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை :

By செய்திப்பிரிவு

தேசிய திறனறித் தேர்வில் தேர்வு பெற்ற புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வழங்கினார்.

மாணவர்களின் திறனைக் கண்டறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் தேசிய அளவில் திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் மாநில அளவில் தேர்வு பெற்ற 20 மாணவர்களுக்கு தலா ரூ.5000, தேசிய அளவில் தேர்வு பெற்ற மூன்று மாணவ மாணவியருக்கு தலா ரூ.10,000-க்கான தொகை காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுவை கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வித்துறையின் இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுப் பிரிவு பொறுப்பு துணை முதல்வர் பூபதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்