திருவண்ணாமலை மாவட்டத்தில் - மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. தி.மலை மாவட்ட நீதிபதி திருமகள் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சிறப் புரையாற்றினார். பின்னர் அவர், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி மரக்கன்றை நட்டார்.

இந்த கூட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “நீதிமன்றங் களுக்கு சென்று வழக்கறிஞர்களுடன் உயர் நீதிமன்ற நீதிபதி கலைந்துரையாடி வருவது வரவேற்கத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களில், பாதிக்கப்படுபவர் களுக்கு நீதி கிடைக்க வேண் டும். இந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் மன சாட்சியுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், இந்திய அளவில் கட்டமைப்பு மற்றும் விரைவாக நீதி வழங்குவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்றும், விரைவில் முதலிடம் பிடிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். நீதிபதிகளின் ஆசனத்தில் அமரும் நீதிபதிகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்” என்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, தலைமை நீதிபதியிடம் “தி.மலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதியை தேடி வருபவர்கள் பயன்பெறும் வகையில் ‘லிப்ட்’ வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தி.மலை மாவட்டத்தில் மணல் கடத்தல் உட்பட கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் அதிகளவு நிலுவையில் உள்ளதால், அவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்