சிறு, குறு தொழில்களின் நிலையை அறிய அரசு அமைத்த குழுவில் - குறுந்தொழில் நிறுவன பிரதிநிதியை சேர்க்க வேண்டும் : தமிழக அரசுக்கு டாக்ட் அமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் களின் நிலை குறித்து அறிய தமிழகஅரசு அமைத்துள்ள குழுவில் குறுந்தொழில் நிறுவனங்களின் பிரதி நிதியை சேர்க்க வேண்டும் எனடாக்ட் அமைப்பு வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட்)மாவட்டதலைவர் ஜே.ஜேம்ஸ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தற்போதுள்ள நிலை, எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து அறிய 9 பேர்கொண்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.

பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் இக்குழுவில் சேர்க்கப் பட்டுள்ளனர். அதோடு தொழில் துறையினர் சார்பில் சென்னையில் உள்ள தொழில் அமைப்பான டான்சியா தலைவரை குழுவில் சேர்த்துள்ளதும் நல்ல விஷயம். அதேநேரத்தில் குறுந்தொழில் நிறுவனங்களின் சார்பில் ஒரு பிரதிநிதியை இக்குழுவில் இணைக்க வேண்டும்.

பல நேரங்களில் குறுந்தொழில்முனைவோரின் குரல்கள் இதுபோன்ற அரசு நடவடிக்கைகளில் கவனிக்கப்படாமல் போவது உண்டு. அவ்வாறு இல்லாமல் இருக்க குறுந்தொழில் முனைவோர்தரப்பிலிருந்து ஒருவரை சேர்க்கவேண்டும்.

மேலும், அமைக்கப்பட்டுள்ள குழு தமிழகம் முழுவதும் பயணித்து அனைத்து தொழில்அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோரின் கருத்துகளை அறிந்து, ஆய்வை சரியான முறையில் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து தொழில் துறையினருக்கும் இது பயனளிப்பதாக இருக் கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்