சேலம் மாவட்டத்துக்கு நேற்று 12,500 டோஸ் கோவிஷீல்டு வந்தது :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி வரை மொத்தம் 9 லட்சத்து 89 ஆயிரத்து 41 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி 12 ஆயிரத்து 500 டோஸ் வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 138 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி வந்தவுடன், தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எண்ணிக்கை அடிப்படையில் மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி விவரம் தடுப்பூசி போடும் நாள் அறிவிப்பாக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி கடந்த 25-ம் தேதி வரை சேலம் சுகாதார மாவட்டத்தில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 210 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து154 பேரும் என மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 89 ஆயிரத்து 41 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, சேலம் மாவட்டத்துக்கு நேற்று 12 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. அதில், சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரம் டோஸ்களும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்