மீனவர்கள் பிரச்சினை தீர விரைவில் சமாதானக் கூட்டம் : கடலூர் எஸ்பி தகவல்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பரங்கிப்பேட்டை அருகேபு.முட்லூரில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமை தாங்கி பேசியது: கடலில் நடக்கும் பிரச்சினைகளை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவியுங்கள்.

கடலுக்கு வெளியே உங்க ளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும், நீங்கள் அரசுக்கு உதவியாக இருக்கவேண்டும்.கடந்த காலங்களில் உங்கள் தரப்பு தவறுகளை நீங்கள் உணர்ந்து முதலில் சரி செய்து கொள்ளவேண்டும். கடலூர் மாவட்ட மீனவர் பிரச்சினை தீர்ப்பதற்கு சமாதானக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். அதில் கிராம பொதுமக்களின் ஒருமித்த கருத்தோடு, ஒரே குரலாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ்,காவல் ஆய்வாளர்கள் வினோதா, ஆறுமுகம் மற்றும்சாமியார்பேட்டை, சித்திரைப் பேட்டை,சின்னூர் தெற்கு,சின்னூர் வடக்கு, புதுக்குப்பம், சி.புதுப் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங் களைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்