கோவை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறையால் - ரூ.98 கோடி மதிப்பிலான 396 திட்டப் பணிகள் ரத்து :

By செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட பணிகள் மற்றும் ஏற்கெனவே தொடங்கப்படாத பணிகள் என்ற அடிப்படையில் 396 பணிகளை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகரில் அபிவிருத்திபணிகள், பராமரிப்பு பணிகள், மழைநீர் வடிகால் பணிகள்,பூங்கா பராமரிப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதில் ஒப்பந்ததாரர்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக் கான தொகை ரூ.120 கோடி வரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு மாநகராட்சியில் நிலவும் கடும் நிதி பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாநகராட்சியின் தற்போதைய நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு, ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட பணிகள் மற்றும் ஏற்கெனவே தொடங்கப்படாத பணிகள் என்றஅடிப்படையில், கிழக்கு மண்டலத்தில் 103, மேற்கு மண்டலத்தில் 64, வடக்கு மண்டலத்தில் 75, தெற்கு மண்டலத்தில் 102, மத்திய மண்டலத்தில் 52 என மொத்தம் ரூ.98 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான 396 பணிகளை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இதுதொடர் பாக கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்ய முடிவு செய்யப்பட்ட பணிகளில் அத்தியாவசிய பணிகள் ஏதேனும் இருந்தால், மாநகராட்சி நிதி ஆதாரம் சீரானவுடன் முன்னுரிமை அடிப்படை யில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள் ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

கருத்துப் பேழை

31 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

15 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்