மருந்துக் கடையில் சிகிச்சை அளித்த : போலி மருத்துவர் கைது :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோட்டில் மருந்துக் கடையில் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருச்செங்கோட்டில் உள்ள காவலர் குடியிருப்பு அருகே உள்ள தனியார் மருந்துக் கடையில் அதன் உரிமையாளர் மோகன்ராஜ் (40) காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மருந்துக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த மக்கள் சிலருக்கு மோகன்ராஜ் ஊசி போட்டுக் கொண்டிருந்தார். அவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் பிடித்தனர். விசாரணையில் அவர் பி.காம். பட்டதாரி என்பதும், மனைவியின் கல்விச் சான்றிதழை வைத்து மருந்துக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சுகாதாரத் துறையினர் ஒப்படைத்தனர். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருந்துக் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்