விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்த விழுப்புரம் எம்எல்ஏ :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் `உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக் களை பெற நேற்று காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது ராகவன் பேட்டை அருகே பைக்கில் வந்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் ஜெயகுமார் (24) என்பவர் விபத்தில் சிக்கி இடதுகால் எலும்பு முறிவுடன் சாலையோரம் கிடந்தார்.

இதனைக்கண்ட எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்துக்கொண்டிருந்த ஜெயகுமாருக்கு முதலுதவி அளிக்க தொடங்கினார். காலில் கட்டுபோட துணிகள் அப்போது இல்லாததால் காரில் இருந்த திமுக கரை வேட்டியை கிழித்து கட்டு போட்டு, சிகிச்சை அளித்தார். இதற்கிடையே அங்குவந்த ஆம்புலன்ஸில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின் புறப்பட்டு சென்றார். விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் எலும்பு முறிவு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்