‘தொரட்டி’ படத்தில் நடித்த - நடிகர் ஷமன்மித்ரு கரோனாவால் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

‘தொரட்டி’ திரைப்படத்தில் நடித்த, நடிகர் ஷமன்மித்ரு (வயது 43) நேற்று காலை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

நடிகர் ஷமன்மித்ரு, கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவரான ஷமன்மித்ரு தமிழ், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான பல படங்களுக்கு இணை ஒளிப்பதிவாளராக இருந்தவர். திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.

திரைத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர், ‘தொரட்டி’ என்ற திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தார். இப்படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் தேர்வாகி திரையிடப்பட்டது. தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கிய நிலையில் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

காரைக்குடி, சிங்கம்புணரியை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்‌ஷா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்