குளங்கள் புனரமைப்பு பணி ஆய்வு :

By செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரிய குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா குளங்களை நேற்று ஆய்வு செய்தார்.

கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய நிழல் இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், உடற்பயிற்சி நிலையங்கள், படகு துறை, மிதவை உணவகம் போன்றவசதிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

தொடர்ந்து, கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா களப் பணியாளர்களை சந்தித்தார். வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர்மூலம் உடல் ஆக்சிஜன் அளவைகண்டறிதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்