விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மோகன் நேற்று காலை பொறுப்பேற்றார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை தலைமைச் செயலர் இறையன்பு கடந்த 13-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டி.மோகன் நேற்று காலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

‘சம்பிரதாய கூட்டங்கள் இனி நடைபெறாது’

“என் செல்பேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம். வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் தகவல்களும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சம்பிரதாயமாக இல்லாமல் அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்படும்” என்றும் புதிய ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். 21-வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மோகன் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.இ,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றவர். 2005-ம் ஆண்டு குரூப் 1- தேர்வில் தேர்ச்சி பெற்று காஞ்சிபுரத்தில் துணை ஆட்சியராக பணியாற் றினார். பின்னர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், டாஸ் மாக், சுற்றுலா வளர்ச்சித் துறை, பொது மரபுத் துறை, மதுவிலக்கு ஆயத்துறைகளில் பொது மேலாளராகவும், ஆளுநரின் துணை செயலாளராகவும் பணியாற்றினார். டாஸ்மாக் மேலாண்இயக்குநராக பணியாற்றிய அவர், தற் போது விழுப்புரம் மாவட்டஆட்சியராக பொறுப்பேற் றுள்ளார். புதிய ஆட்சியராகபொறுப்பேற்ற மோகன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “முதல்வரின் 7 அம்ச திட்டங்களை விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த முழுக்கவனம் செலுத்துவேன். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வுக்காணப்படும்.

கரோனா இல்லாத மாவட்டமாக்க சுகாதாரத் துறையினர்ஒத்துழைப்புடன் நடவடிக்கைஎடுக்கப்படும். இதற்கு முன்விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிய அண்ணாதுரை வேளாண் இயக்குநராக பணிமாறுதல் செய்யப் பட்டுள்ளார்.

விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக இருந்த ஸ்ரேயா பி சிங் நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்

தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். 2005-ம் ஆண்டு குரூப் 1-ல் தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக ஆனார். பல்வேறு உயர் பொறுப்புகளை பெற்று, தற்போது விழுப்புரம் ஆட்சியராக ஆகியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்