திருமணத்தை நிறுத்திய மாணவி தற்கொலை :

By செய்திப்பிரிவு

மதுரையில் போலீஸார் உதவி யுடன் தனது திருமணத்தை நிறுத் திய 17 வயது மாணவி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார்.

மதுரை பாண்டிகோயில் அருகிலுள்ள சாமியார்தோப்பு ஜெஜெ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரஜினிகாந்த். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர் களது 17 வயது மகள், அதே பகுதியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவருக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதை விரும்பாத மாணவி, கடந்த 11-ம் தேதி மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரனின் மொபைல் எண்ணில் தகவலை பதிவிட்டார். அதில், தான் படிக்க விரும்புவதாகவும், தனது விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தி ருந்தார். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் அண்ணாநகர் போலீஸார், மாணவியையும், அவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசா ரித்தனர். 18 வயது பூர்த்தியாகாத மாணவிக்கு திருமணம் செய்வது குற்றம் என்பதை தெரிவித்து, அவருக்கு திருமண ஏற்பாடு செய்யக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

மாணவியைக் காப்பகத்தில் சேர்க்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், பேரையூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பு வதாக மாணவி தெரிவித்தார். அதையடுத்து அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இந்நிலையில், சாமியார் தோப்பிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த மாணவி, நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாநகர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்