மத்திய அரசின் விருதுகளுக்கு - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் மத்திய அரசின் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் துரோணாச்சாரியா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் விருது, தயான் சந்த் விருது ஆகியவை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுகளுக்கு 2021-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை surendra.yadav@nic.in அல்லது girnish.kumar@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்