கோவை - சேலம் நான்கு வழிச்சாலையுடன் : சத்தியமங்கலம் சாலையை இணைக்க சேவை சாலை :

By செய்திப்பிரிவு

ஈரோடு: சித்தோடு அருகே கோவை - சேலம் நான்குவழிச்சாலையுடன், சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் சேவை சாலைப்பணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோவை - சேலம் நான்குவழிச்சாலையையும், சத்தியமங்கலம் செல்லும் சாலையையும் இணைக்கும் சாலை உள்ளது. இச்சாலை முழுமையாகப் போடப்படாததால், வாகனங்கள் மேடு, பள்ளமாக உள்ள பழுதடைந்த சாலையில் பயணிக்க வேண்டியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்ந்த நிலையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சாலையை சீரமைக்கும் பணி உடனே தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 850 மீட்டர் நீளத்தில், 5.5 மீட்டர் அகலத்தில் இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை பார்வையிட்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில், விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்