வலது பக்கம் இதயம் அமைந்துள்ள சிறுவன் :

By செய்திப்பிரிவு

இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கம் அமைந் துள்ளதால் மகனின் மருத்துவச் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.

மதுரை தத்தனேரி பாக்கிய நாதபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (37). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இவர்களது மகன் சபரி (7). இவர் பிறவியிலேயே உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் இடம் மாறிய நிலையில் பிறந்துள்ளார்.

உடலின் இடதுபுறம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்க மும், சிறுநீரகம் உள்ளிட்ட சில உறுப்புகள் உடலில் இடம் மாறி இருப்பதாகவும், அதனால், கடந்த 7 ஆண்டாக சிறுவன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவதால் தனது மகனுக்கு மருத்துவ உதவி புரிய வேண்டும் என்று மாடசாமியும், அவரது மனைவியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து மாடசாமி கூறி யதாவது: எனது மகன் சபரியி ன் உடல் உறுப்புகள் மாறி மாறி அமைந்துள்ளதால், கடந்த 7 ஆண்டுகளாக காய்ச்சல், மயக்கம், தலைச்சுற்றல், சளி, இருமல் என தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடும் வேதனைகளை அனுபவித்து வருகிறான்.

கடந்த 6 ஆண்டுகளாக தனி யார் மருத்துவமனைகளில் இதுவரை ரூ. 6 லட்சம் வரை சிகிச்சைக்காகச் செலவழித்து விட்டோம். கூலி வேலை செய்து வரும் நிலையில், எனது மகனுக்கு இனிமேலும் மருத்துவச் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

அவசர மருத்துவச் சிகிச்சை செய்து, எனது மகனின் எப்ப டியாவது உயிரைக் காப்பாற்ற ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்