அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் : தேர்வு செய்யப்பட்ட இடங்களை எம்எல்ஏ ஆய்வு

By செய்திப்பிரிவு

சேத்துப்பட்டில் அரசு மருத்துவ மனை கட்டிடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பாக சேத்துப்பட்டு வட்டம் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட் டது. ஆனால், போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்ததால் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அரசுக்கு திரும்பச் செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி சாலையில் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பைக்கிடங்கு மற்றும் வந்தவாசி சாலையில் உள்ள சர்க்கரை பிள்ளையார் கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், பொது மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, சேத்துப் பட்டு வட்டாட்சியர் பூங்காவனம், பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, மருத்துவ அலுவலர் ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்