நிதி நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் குழுக்களிடம் கடன் தொகையை கடினமாக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள், தங்களது அவசர தேவைக்காக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் பெற்றுள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கடன் மற்றும் வட்டித் தொகையை உடனடியாக செலுத்துமாறு மிரட்டுவதாக புகார் வந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடன் தொகையை கடினமாக வசூலிக்கும் முறையை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக புகார்கள் தொடர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்