கீழே கிடந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரூபன் மனைவி மஞ்சு(32). இவரது தாய், தந்தை இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், கரூர் தனியார் மருத்துவமனையில் மே 31-ம் தேதி சேர்க்கப்பட்டனர். அன்று, ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காக மஞ்சு சென்றபோது, கரூர்-கோவை சாலையில் மணிபர்ஸ் ஒன்றை கண்டெடுத்தார்.

அதில் ஒரு ஏடிஎம் கார்டு, ரூ.31,300 ரொக்கம் இருந்தது. இதை யடுத்து, அந்த மணிபர்ஸை அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த பெண் காவலர் வினேகாயிடம் மஞ்சு ஒப் படைத்தார். அந்த மணிபர்ஸில் முகவரி, தொடர்பு எண் எதுவும் இல்லாத நிலையில், அதிலிருந்த ஏடிஎம் கார்டை வைத்து வங் கியை தொடர்புகொண்ட காவலர் வினேகா, பர்ஸின் உரிமையாளரான புலியூரைச் சேர்ந்த புவனேஸ்வரியை கண்டுபிடித்து, அங்கு நேரில் சென்று, பணத்துடன் பர்ஸை ஒப்படைத்தார்.

இதுகுறித்து எஸ்.பி சசாங்சாய் அறிந்ததும், மஞ்சு மற்றும் வினே கா ஆகியோரின் நேர்மை, நன்னடத்தையைப் பாராட்டி, மஞ்சுவுக்கு நற்சான்றிதழ், நினைவுப் பரிசு, வினேகாக்கு நற்சான்றிதழ் வழங்கி நேற்று பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

49 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்