ஊரடங்கு முடிந்த பிறகு - மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்படும் : அமைச்சர் கே.என்.நேரு உறுதி

By செய்திப்பிரிவு

ஊரடங்கு முடிந்த பிறகு காந்தி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் திரும்பிவிடலாம் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது சொந்த நிதியில் வாங்கிய 75 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் வழங்கினர்.

தொடர்ந்து, செய்தியாளர் களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. முதல்வரின் அனுமதி பெற்று அந்தந்த மாவட்டங்களில் தேவை யான எண்ணிக்கையில் மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகி யோரை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊரடங்கு முடிந்த பிறகு காந்தி மார்க்கெட்டுக்கே வியாபாரிகள் மீண்டும் திரும்பிவிடலாம். திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனையை அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

தொடர்ந்து, அம்மா மண்டபம் காவிரி ஆற்றை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, அங்கு கிடந்த கற்கள், பழைய துணிகள், குப்பை ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்தவும், சேதமடைந்துள்ள படித்துறையை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, பெரியமிளகு பாறை வேடுவர் தெருவில் மாந கராட்சி பொது நிதி ரூ.2.90 லட்சத்தில் ஆழ்துறை கிணறு மற்றும் மின் மோட்டார் இணைப் புடன் அமைக்கப்பட்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அங்கு கழிவு நீர் குட்டையாக மாறிக்கிடக்கும் பழைய கல்குவாரியை சீரமைக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறி யாளர் எஸ்.அமுதவல்லி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்