பிராணிகளுக்கு உணவளிக்க ஆளுநர் ரூ.10 லட்சம் நிதி :

By செய்திப்பிரிவு

கரோனா முழு ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் வீதிகளில் நடமாடும் பிராணிகளுக்கு உணவு அளிப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா முழு ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் வீதிகளில் நடமாடும் பிராணிகளுக்கு உணவு வழங்குவதற்கு, பொதுமக்கள் நிதியுதவி வழங்குமாறு தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதையடுத்து, பிராணிகளுக்கு உணவு வழங்குவதற்காக, ஆளுநர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து பிராணிகள் நல வாரிய சிஎஸ்ஆர் நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். இதற்கான காசோலையை தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டி.எஸ்.ஜவகரிடம் ஒப்படைத்தார். ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உடனிருந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

இந்தியா

56 mins ago

ஓடிடி களம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்