கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்/ அரியலூர்: தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நிதியுதவி வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமை வகித்து பேசியபோது, “பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,82,758 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.36.55 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது” என்றார்.

இதேபோல, அரியலூர் மாவட்ட பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி, அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், எஸ்.பி வீ.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்து, கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து பேசியபோது, “அரியலூர் மாவட்டத்தில் 2,32,646 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.46.53 கோடி வழங்கப்பட உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்