உடுமலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு - ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு : 92 பேர் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உடுமலை வட்டாரத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 92 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, "கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 51 பேர், அரசு கலைக் கல்லூரியில் செயல்படுத்தப்படும் சிறப்பு கரோனா மையத்தில் 41 பேர் என மொத்தம் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும்25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பிற ஊர்களில் தானே பரவுகிறது என்ற எண்ணத்தில் தேவையின்றி ஊர் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக இந்நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்" என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை.முகக் கவசம் அணியவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டுமே என்ற காரணத்துக்காகவே அணிந்து வரும் நிலை உள்ளது. நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், நம்மை கரோனா வைரஸ்எதுவும் செய்யாது என்பது போன்றமனோநிலை. அசட்டுத்தனமான துணிச்சல். அதுவே அவசியமின்றி பொது இடங்களுக்கு வந்து செல்லதூண்டுவது என பெரும்பாலானவர்களின் நடவடிக்கையாக உள்ளது.

அரசு உத்தரவால் உணவகம், தேனீர் அங்காடிகள், சலூன் கடைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது ஆரோக்கியமானது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்