தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறையா? : பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இன்று (மே 1) முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனியார் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் வெளியிடப்படாததால் அதன் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்தான் பள்ளிக்கு நேரில் வந்து பணிபுரிகின்றனர். அதனால் அவர்களுக்கு விடுமுறை அளித்து, வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் இணையவழியில் மட்டுமே பாடங்களை நடத்தி வருகின்றனர். சில தனியார் பள்ளிகளில் மட்டும் அலுவல் பணிகளைக் கவனிக்க அருகே உள்ள ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.

இதையடுத்து அத்தியாவசியமின்றி ஆசிரியர்களை நேரில் வரவழைப்பதைத் தவிர்க்கவும், மாணவர் சேர்க்கை, அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட அலுவல் வேலைகளை வீடுகளில் இருந்தபடியே மேற்கொள்ள வழிவகை செய்யவும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்